52 கிலோகிராம் ஹெரோயினுடன் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூவர் கைது 

52 கிலோகிராம் ஹெரோயினுடன் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூவர் கைது 

52 கிலோகிராம் ஹெரோயினுடன் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூவர் கைது 

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2021 | 10:55 am

Colombo (News 1st) 52 கிலோகிராமுடன் பயணித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அஹங்கம, ஹிக்கடுவ, பத்தேகம மற்றும் காலி ஆகிய இடங்களில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் இதில் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளுடன் பயணித்த இரண்டு வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன,.

சந்தேகநபர்களை நீதிமன்ற அனுமதியுடன் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்