வைத்தியர் சுதத் சமரவீரவிற்கு இடமாற்றம்

தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளருக்கு இடமாற்றம்

by Staff Writer 19-06-2021 | 8:37 AM
Colombo (News 1st) தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீரவிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வைத்தியர் சுதத் சமரவீர சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த இடமாற்றம் நேற்iறய தினம் (18) வழங்கப்பட்டுள்ளது. விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகேவை, தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவின் பதில் பணிப்பாளராக நியமித்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார். இதேவேளை, டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் அருண ஜயசேகர கண்டி தேசிய வைத்தியசாலையின் மேலதிக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்