திங்கட்கிழமை முதல் மாகாணத்திற்குள் ரயில் சேவை

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாகாணத்திற்குள் மாத்திரம் ரயில் சேவையை முன்னெடுக்க தீர்மானம்

by Staff Writer 19-06-2021 | 1:08 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதும், மாகாணத்திற்குள் மாத்திரம் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 21 ஆம் திகதி முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி இரவு 10 மணி வரை, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் பயணிகளுக்காக மேல் மாகாணத்திற்குள் மாத்திரம் 17 ரயில் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியசட்கர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். பிரதான மார்க்கத்தில் 6 ரயில்களும் கரையோர மார்க்கத்தில் 4 ரயில்களும் களனிவௌி மார்க்கத்தில் 4 ரயில்களும் புத்தளம் மார்க்கத்தில் 3 ரயில்களும் சேவையில் ஈடுபடவுள்ளன. அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரமே 23 ஆம் திகதியின் பின்னர் சேவையில் ஈடுபடுவது குறித்து தீர்மானிக்கப்படும் என ரயில்வே போக்குவரத்து அத்தியசட்கர் காமினி செனவிரத்ன மேலும் கூறியுள்ளார். எவ்வாறாயினும் பஸ் சேவையை முன்னெடுப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பஸ் சேவை குறித்த ஆலோசனைக்காக காத்திருப்பதாக சபையின் பிரதி பொதுமுகாமையாளர் ஏ.எச் பண்டுக குறிப்பிட்டுள்ளார். எனினும், பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதும் மாகாணத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ் சேவைகளை முன்னெடுக்க திட்டமிப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.