மீனவர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவிற்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

மீனவர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவிற்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

மீனவர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவிற்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2021 | 10:04 am

Colombo (News 1st) X-Press Pearl கப்பலில் தீ பரவியதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவிற்காக, 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடற்றொழில் திணைக்களத்தின் இணைப்பதிகாரிகளிடம் இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

X-Press Pearl கப்பலில் தீ பரவியதால் நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த எண்ணாயிரத்திற்கும் அதிக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பயணக் கட்டுப்பாட்டின் காரணமாக விவசாயிகளின் மரக்கறிகள் மற்றும் பழ அறுவடையை கொள்வனவு செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தேவைக்கேற்ப எதிர்வரும் காலங்களில் மேலதிக நிதியை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.’


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்