தேங்காய்க்கான அதிகூடிய சில்லறை விலை இரத்து

தேங்காய்க்கான அதிகூடிய சில்லறை விலை இரத்து

தேங்காய்க்கான அதிகூடிய சில்லறை விலை இரத்து

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2021 | 2:29 pm

Colombo (News 1st) தேங்காய்க்கான அதிகூடிய சில்லறை விலை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வௌியிடப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஷாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் செப்டம்பர் 25 ஆம் திகதி தேங்காய் ஒன்றிற்கான அதிகூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது.

இதேவேளை, தென்னை மரங்களை வெட்டி வீழ்த்துதல் கட்டுப்படுத்தல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படடுள்ளன.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்