டெல்டா பிறழ்வு பரவுவதை தடுக்க நடவடிக்கை

டெல்டா பிறழ்வு பரவுவதை தடுக்க நடவடிக்கை

டெல்டா பிறழ்வு பரவுவதை தடுக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2021 | 9:58 am

Colombo (News 1st) இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸின் டெல்டா பிறழ்வினால் பாதிக்கப்பட்டோர் சமூகத்தில் உள்ளனரா என்பதை கண்டறிவதற்காக, நாட்டின் பல பாகங்களிலும் மாதிரிகள் சேகரிக்கப்படவுள்ளன.

பல்வேறு இடங்களிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து நேற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வௌிநாடுகளிலிருந்து நாட்டிற்கு திரும்பியோர் தங்கியுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

சேகரிக்கப்பட்ட மாதிரிகள், ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

புதிய வைரஸ் தொற்றுடன் தெமட்டகொடை – ஆராம பகுதியில் அடையாளம் காணப்பட்ட ஐவருடன் தொடர்புகளை பேணியோரை அடையாளங்காணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் பரவிய கொவிட் வைரஸின் டெல்டா பிறழ்வு தொற்று தெமட்டகொடை பகுதியில் பதிவானமை தொடர்பாக அரச புலனாய்வுப் பிரிவு மற்றும் தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவு என்பன விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

குறித்த பகுதி தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்