உதய கம்மன்பிலவிற்கு எதிரான பிரேரணை தொடர்பில் பரிசீலிப்பதாக கூட்டமைப்பு தெரிவிப்பு

உதய கம்மன்பிலவிற்கு எதிரான பிரேரணை தொடர்பில் பரிசீலிப்பதாக கூட்டமைப்பு தெரிவிப்பு

உதய கம்மன்பிலவிற்கு எதிரான பிரேரணை தொடர்பில் பரிசீலிப்பதாக கூட்டமைப்பு தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2021 | 10:03 pm

Colombo (News 1st) எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பரிசீலிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றவுள்ளது.

இதன்போது, அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்