ஈரான் அதிபராகிறார் எப்ராஹிம் ரைசி

ஈரான் அதிபராகிறார் எப்ராஹிம் ரைசி

ஈரான் அதிபராகிறார் எப்ராஹிம் ரைசி

எழுத்தாளர் Bella Dalima

19 Jun, 2021 | 5:17 pm

Colombo (News 1st) ஈரானில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

ஈரானின் தலைமை நீதிபதி எப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) 62 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

இதனால் அவர் அந்நாட்டின் அதிபராவது உறுதியாகியுள்ளது.

பல வேட்பாளர்கள் போட்டியிடுவதில் இருந்து தடை செய்யப்பட்ட நிலையில், மற்ற மூன்று வேட்பாளர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ரைசி முன்னிலை பெற்றுள்ளார்.

கடும்போக்குவாதியாக அறியப்படும் இவர், அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில் தொடர்புடையவர். அமெரிக்க அரசால் தடை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர்.

ரைசியுடன் போட்டியிட்ட மூவரும், பதவி நிறைவு பெறும் அதிபர் ஹசன் ரௌஹானியும் ரைசியின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்