24 மணி நேரத்திற்குள் இறுதிக்கிரியை நடத்த அனுமதி

COVID தொற்று இல்லாதவர்கள் உயிரிழந்தால் 24 மணி நேரத்திற்குள் இறுதிக்கிரியை நடத்த அனுமதி வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Bella Dalima 18-06-2021 | 4:39 PM
Colombo (News 1st) COVID-19 தொற்று உறுதி செய்யப்படாதவர்கள் உயிரிழந்தால் அவர்களின் இறுதிக்கிரியையை 24 மணித்தியாலங்களுக்குள் நடத்துவதற்கான அனுமதியை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இறுதிக் கிரியைகளின் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கல்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார். மேலும், கொரோனா காரணமாக உயிரிழப்போர் தொடர்பான தரவுகளை உரிய நேரத்தில் வெளியிடுவதற்கான அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, ஏற்கனவே 4 மில்லியனுக்கும் அதிகமான COVID தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மேலும் 04 மில்லியன் தடுப்பூசிகள் ஜூலை மாதத்தில் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலானோருக்கு தடுப்பூசிகளை செலுத்த முடியும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.