.webp)

கொழும்பு மாவட்டத்தில் 562 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 455 பேரும் கண்டி மாவட்டத்தில் 22 நபர்களும் யாழ். மாவட்டத்தில் 63 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 70 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 46 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 46 நபர்களும் பதுளை மாவட்டத்தில் 13 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 115 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் திருகோணமலை மாவட்டத்தில் 49 பேரும் வவுனியா மாவட்டத்தில் ஒருவரும் மன்னார் மாவட்டத்தில் 16 பேரும் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
இதனிடையே, நேற்று முன்தினம் (16) மேலும் 51 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.
இவ்வாறு மரணமடைந்த 51 பேரில் 31 ஆண்களும் 20 பெண்கள் உள்ளடங்குகின்றனர்.
நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களுடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்துள்ளது.

