உயிரிழந்த கடல்வாழ் உயிரினங்கள் தொடர்பில் ஆய்வு

மீட்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்களின் உடல்கள் தொடர்பான பரிசோதனைகள் ஆரம்பம்

by Staff Writer 18-06-2021 | 12:18 PM
Colombo (News 1st) கடந்த சில தினங்களாக நாட்டின் கரையோரப் பகுதிகளில் மீட்கப்பட்ட கடலாமை உள்ளிட்ட உயிரினங்களின் உடல்கள் தொடர்பான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த பரிசோதனைகளூடாக கடல்வாழ் உயிரிழனங்கள் உயிரிழந்தமைக்கான உறுதியான காரணம் குறித்து கண்டறிய முடியும் என அரச இரசாயன பகுப்பாய்வாளர் கௌரி ரமணா தெரிவித்தார். இதனை தவிர X-Press Pearl கப்பல் தீப்பற்றிய போது ஏற்பட்ட இரசாயன கசிவினால் கடல் நீருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் கடல் நீரின் தரம் குறித்தும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார். இந்த ஆய்வுகளின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் சுட்டிக்காட்டினார்.

ஏனைய செய்திகள்