மக்கள் சக்தி தலைமைத்துவ பயிற்சிக்கான சான்றிதழ் இன்று வழங்கப்பட்டது

மக்கள் சக்தி தலைமைத்துவ பயிற்சிக்கான சான்றிதழ் இன்று வழங்கப்பட்டது

மக்கள் சக்தி தலைமைத்துவ பயிற்சிக்கான சான்றிதழ் இன்று வழங்கப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2021 | 2:39 pm

Colombo (News 1st) மக்கள் சக்தி தலைமைத்துவ பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ZOOM தொழில்நுட்பத்தினூடாக இன்று (18) நடைபெற்றது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்,  பேராசிரியர் உபுல் பீ. திசாநாயக்க மற்றும் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் நிறைவேற்று குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல் ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

சிறந்த தலைவர்களை உருவாக்கும் நோக்குடன், மக்கள் சக்தி சர்வதேச தலைமைத்துவ பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு இணைய வழியாக இன்று சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதன்போது ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வில்லியம் பில் சில்கோக் தலைமையுறை ஆற்றினார்.

Global Risk Mitigation Foundation  நிறுவனத்தின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் கலாநிதி ரோபட் எல்ரிஜும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்