by Staff Writer 18-06-2021 | 3:00 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையதாக தெரிவித்து, அது குறித்த விசாரணைகளை முன்னெடுக்காதிருக்க வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்பிலிடுமாறு தெரிவித்து பலர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
உயர் பொலிஸ் அதிகாரிகளின் பெயர்களில் செயற்படுகின்ற குழுவொன்று, வீடுகளிலுள்ள தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொண்டு மக்களை அச்சுறுத்தி பணம் பெறுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் 50 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
அவ்வாறு பணம் வைப்பிலிடும் பட்சத்தில், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்படாது விசாரணைகள் நிறைவு செய்யப்படும் என பண மோசடியில் ஈடுபடும் குழு தெரிவிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.