சோனியா காந்தி – மு.க. ஸ்டாலின் சந்திப்பு; அரசியல் ரீதியாக ஆலோசனை

சோனியா காந்தி – மு.க. ஸ்டாலின் சந்திப்பு; அரசியல் ரீதியாக ஆலோசனை

சோனியா காந்தி – மு.க. ஸ்டாலின் சந்திப்பு; அரசியல் ரீதியாக ஆலோசனை

எழுத்தாளர் Bella Dalima

18 Jun, 2021 | 5:13 pm

Colombo (News 1st) காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (18) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ராகுல் காந்தியும் கலந்துகொண்டுள்ளார்.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பிரதமர் நரேந்திர மோடியிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

இதையடுத்து, டெல்லியில் காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து அரசியல் ரீதியாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதன்போது, ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய நாகரிகத்தின் பயணம் – சிந்து முதல் வைகை வரை (Journey of Civilisation – Indus to Vaigai) என்ற நூலை சோனியா காந்திக்கு பரிசளித்துள்ளார் தமிழக முதல்வர்.

இந்நிலையில், இந்த சந்திப்பு தொடர்பில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வளமான, வலிமையான மாநிலமாக தமிழகத்தை மாற்ற தி.மு.க-வுடன் காங்கிரஸ் தொடர்ந்து செயற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்