எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல் ஒத்திவைப்பு

எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல் ஒத்திவைப்பு

எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல் ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2021 | 9:28 am

Colombo (News 1st) சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக, நேற்றிரவு (17) நடைபெறவிருந்த அமைச்சரவை உப குழுவின் கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் அமைச்சரவை உப குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு, LAUGH மற்றும் LITRO நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தன.

அது குறித்து ஆராய்ந்து தீர்மானமொன்றை எடுப்பதற்காக, அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்