இரத்தாகும் இலகு ரயில் திட்டத்திற்காக 5,896 மில்லியன் ரூபாவை இலங்கை செலுத்த வேண்டியுள்ளதாக தகவல்

இரத்தாகும் இலகு ரயில் திட்டத்திற்காக 5,896 மில்லியன் ரூபாவை இலங்கை செலுத்த வேண்டியுள்ளதாக தகவல்

இரத்தாகும் இலகு ரயில் திட்டத்திற்காக 5,896 மில்லியன் ரூபாவை இலங்கை செலுத்த வேண்டியுள்ளதாக தகவல்

எழுத்தாளர் Bella Dalima

18 Jun, 2021 | 11:00 pm

Colombo (News 1st) ஜப்பானின் நிவாரணக் கடனின் கீழ் கடந்த அரசாங்கம் செயற்படுத்த முயன்ற இலகு ரயில் திட்டத்தை இரத்து செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்தாலும் 5,896 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வருடத்தின் அரசாங்கத்தின் நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான கணக்காய்வாளரின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5,896 மில்லியன் ரூபாவை இலகு ரயில் திட்டத்தின் ஆலோசனை சேவைக்கு வழங்க வேண்டியுள்ளதாக கணக்காய்வாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தத் தொகை கடந்த வருடம் அரசாங்கத்தின் நிதி கொடுக்கல் வாங்கல் பதிவுகளில் உள்வாங்கப்படவில்லையெனவும் கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்