பாதிப்புகள் குறித்து ஆராய நிபுணர்கள் வருகை

X-Press Pearl கப்பலில் தீ; பாதிப்புகள் குறித்து ஆராய வெளிநாட்டு நிபுணர்கள் வருகை

by Staff Writer 17-06-2021 | 2:10 PM
Colombo (News 1st) X-Press Pearl கப்பலில் தீ பரவியமையால் சமுத்திர சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக வௌிநாட்டு நிபுணர்கள் மூவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். நாட்டிலுள்ள நிபுணர்களுடன் இணைந்து சர்வதேச நிபுணர்கள் மதிப்பீட்டு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. கப்பல் விபத்துக்களால் சமுத்திர சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மதிப்பிடுவதற்கான சிறந்த அறிவாற்றல் மிக்க நிபுணர்களே நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த நிபுணர்கள் நேற்றிரவு (16) நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுசரணை வழங்குவதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, X-Press Pearl கப்பலில் தீ பரவியமையால் சமுத்திர சூழலுக்கும் கடல்சார் உயிரினங்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நாரா நிறுவனம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது. கடல் நீரின் தன்மை குறித்தும் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.