தமிழ் தேசியக் கூட்டமைப்பு -கோபால் பாக்லே சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு - இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

by Staff Writer 17-06-2021 | 9:35 PM
Colombo (News st) தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றுள்ளது. கொழும்பில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழ் தேசிக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளளர். இதன்போது, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால் அது அற்றுப் போய்விடலாம் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம் என்பவற்றை அபிவிருத்தி செய்ய தாம் தயாராக இருப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது கூறியதாக அவர் குறிப்பிட்டார்.