ஹபராதுவ MOH அலுவலகத்தில் தடுப்பூசி திருட்டு

ஹபராதுவ MOH அலுவலகத்தில் தடுப்பூசி திருட்டு

ஹபராதுவ MOH அலுவலகத்தில் தடுப்பூசி திருட்டு

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2021 | 9:11 am

Colombo (News 1st) சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் 30 Sinopharm தடுப்பூசிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் காலி குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரியின் முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

90,000 ரூபா பெறுமதியான தடுப்பூசிகள் திருடப்பட்டமை தொடர்பில் அலுவலகத்தின் சாரதி மற்றும் சிற்றூழியர் ஒருவர் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்