சாதாரண சளி, காய்ச்சலால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும்: ஆய்வில் தெரியவந்துள்ளது

சாதாரண சளி, காய்ச்சலால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும்: ஆய்வில் தெரியவந்துள்ளது

சாதாரண சளி, காய்ச்சலால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும்: ஆய்வில் தெரியவந்துள்ளது

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2021 | 7:04 pm

Colombo (News 1st) சாதாரண சளி, காய்ச்சல் ஏற்படுவதால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும் என அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து Journal of Experimental Medicine என்ற மருத்துவ அறிவியல் இதழில் தகவல் வெளியாகியுள்ளது.

யேல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் எலன் பாக்ஸ்மேன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சாதாரண சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் தொற்று ஒருவருக்கு ஏற்படும் போது, அந்தத் தொற்றை எதிர்த்து அவரது உடலில் பல்வேறு மாற்றங்கள் உருவாகின்றன. அப்போது உருவாகும் எதிர்ப்பாற்றல், கொரோனா வைரஸிற்கு எதிராகவும் செயற்படும் திறன் கொண்டதாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

ஆனால், இவை அந்த வைரஸ்களின் வேகத்தையும் நீடிக்கும் காலத்தையும் பொறுத்தது என கூறப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்