இன்றும் நாளையும் திறக்கப்படும் பொருளாதார மத்திய நிலையங்கள்

இன்றும் நாளையும் திறக்கப்படும் பொருளாதார மத்திய நிலையங்கள்

இன்றும் நாளையும் திறக்கப்படும் பொருளாதார மத்திய நிலையங்கள்

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2021 | 11:26 am

Colombo (News 1st) அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்றும் (17)  நாளையும் (18) திறக்கப்படவுள்ளன.

தம்புள்ளை, தம்புத்தேகம, நுவரெலியா, கெப்பிட்டிப்பொல, நாரஹேன்பிட்ட, மீகொட, பிலியந்தலை, இரத்மலானை, வெயாங்கொடை, வெலிசறை மற்றும் நாவலப்பிட்டி பொருளாதார மத்திய நிலையங்கள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய திறக்கப்படவுள்ளன.

மொத்த விற்பனைக்காக மாத்திரம் குறித்த பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

மொத்த வியாபாரத்திற்கான மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கான இயலுமை இன்றும் நாளையும் காணப்படுவதாக மெனிங் பொதுச்சந்தை சங்கத்தின் பிரதம ஏற்பாட்டாளர் அனில் இந்திரஜித் தெரிவித்துள்ளார்.

அதிகளவான மரக்கறிகளுடன் விவசாயிகள் தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருகை தருவதாக வர்த்தக சங்கத்தின் தலைவர் ஷாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இன்று காலை 6 மணி முதல் இரவு வரை கெப்பெட்டிபொல பொருளாதார நிலையம் திறந்திருக்கும் என அதன் வர்த்தக சங்கம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்