சூரிய சக்தி மின்னுற்பத்தியை அதிகரிக்க LOC கடன்

சூரிய சக்தி மின்னுற்பத்தியை அதிகரிக்க 100 மில்லியன் டொலர் கடன்: இலங்கை இந்தியா இடையில் உடன்படிக்கை கைச்சாத்து

by Staff Writer 16-06-2021 | 9:35 PM
Colombo (News 1st) சூரிய சக்தி மின்னுற்பத்தியை அதிகரிக்க 100 மில்லியன் டொலர் கடன்: இலங்கை இந்தியா இடையில் உடன்படிக்கை கைச்சாத்து இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் 100 மில்லியன் அமெரிக்க டொலர் Line of Credit (LOC) எனப்படும் கடன் பெறுகை வழிமுறை உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திடப்பட்டது. சூரிய சக்தி மின்னுற்பத்தியை அதிகரிப்பதற்கு இந்த கடன் பெறப்படவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்தானிகர் கோப்பால் பாக்லே ஆகியோர் உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். அரச கட்டடங்கள், மத வழிப்பாட்டுத்தலங்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இலக்காகக் கொண்டு, சூரிய சக்தி மின்னுற்பத்தியை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்ட நடவடிக்கையாக பாராளுமன்ற கட்டட தொகுதிக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.