யூரோ கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த ரொனால்டோ

யூரோ கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த ரொனால்டோ

யூரோ கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த ரொனால்டோ

எழுத்தாளர் Bella Dalima

16 Jun, 2021 | 5:31 pm

Colombo (News 1st) புடாபெஸ்ட் நகரில் நேற்று (15) நடைபெற்ற F பிரிவு ஆட்டத்தில் போர்ச்சுகல், ஹங்கேரி அணிகள் கோதாவில் குதித்தன. இதில் போர்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வென்றது.

இந்த போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல் அடித்தார். இதன்மூலம் 36 வயதான ரொனால்டோ ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக கோல்கள் (மொத்தம் 11 கோல்) அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

இதற்கு முன் பிரான்ஸின் மைக்கேல் பிளாட்டினி 9 கோல் போட்டதே சாதனையாக இருந்தது. அவரது சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார்.

அத்துடன், தொடர்ந்து 5 ஐரோப்பிய தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் ரொனால்டோ பெற்றார். போர்ச்சுகல் அணிக்காக அவர் 106 கோல்களைப் போட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்