சொகுசு வாகன இறக்குமதிக்கான கடன்களை இரத்து செய்யுமாறு சிங்கப்பூர் வங்கிகளிடம் இலங்கை வங்கி கோரிக்கை

சொகுசு வாகன இறக்குமதிக்கான கடன்களை இரத்து செய்யுமாறு சிங்கப்பூர் வங்கிகளிடம் இலங்கை வங்கி கோரிக்கை

சொகுசு வாகன இறக்குமதிக்கான கடன்களை இரத்து செய்யுமாறு சிங்கப்பூர் வங்கிகளிடம் இலங்கை வங்கி கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

16 Jun, 2021 | 10:49 pm

Colombo (News 1st) 228 சொகுசு ஜீப்கள் உள்ளிட்ட 399 வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக ஏப்ரல் 22 ஆம் திகதி அனுப்பப்பட்ட L.C எனப்படும் 6 கடன் கடிதங்களையும் இரத்து செய்யுமாறு இலங்கை வங்கி இன்று சிங்கப்பூரிலுள்ள இரண்டு வங்கிகளிடம் கோரியுள்ளது.

குறித்த கடன் கடிதங்கள் அடுத்த வருடம் மே 30 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் வகையில் முன்வைக்கப்பட்டிருந்தன.

நிதி அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாக இலங்கை வங்கியின் அபிவிருத்திப் பிரிவு பொது முகாமையாளரால் இந்த 6 கடன் கடிதங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.

370 கோடி ரூபா பெறுமதியான 399 வாகனங்களையும் தவணைக் கொடுப்பனவு முறைமையின் கீழ் இலங்கை வங்கி பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவை குழு கடந்த மே 5 ஆம் திகதி பரிந்துரையை சமர்ப்பித்திருந்தது.

எனினும், இந்தத் தருணத்தில் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களை இறக்குமதி செய்வதற்குக் கூட அமைச்சரவை குழு மே 24 ஆம் திகதி தடை விதித்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்