கொலன்னாவ நகர சபை உறுப்பினர்கள் இருவர் கைது 

கொலன்னாவ நகர சபை உறுப்பினர்கள் இருவர் கைது 

by Staff Writer 16-06-2021 | 12:40 PM
Colombo (News 1st) வெல்லம்பிட்டி - மீதொட்டமுல்ல பகுதியில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு உரித்தான களஞ்சியசாலையில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரமொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலன்னாவ நகர சபை உறுப்பினர்கள் இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்