கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

16 Jun, 2021 | 9:56 am

Colombo (News 1st) இன்று (16) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 2,334 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

அவர்களில் ஒருவர் வௌிநாட்டிலிருந்து நாடு திரும்பியவராவார்.

கொழும்பு மாவட்டத்தில் 546 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 250 பேரும் கண்டி மாவட்டத்தில் 161 பேரும் யாழ். மாவட்டத்தில் 125 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 21 நபர்களும் கேகாலை மாவட்டத்தில் 21 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 51 நபர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 162 பேரும் பதுளை மாவட்டத்தில் 41 நபர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 96 நபர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 22 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் திருகோணமலை மாவட்டத்தில் இருவரும் வவுனியா மாவட்டத்தில் 17 நபர்களும் மாத்தளை மாவட்டத்தில் 79 பேரும் மன்னார் மாவட்டத்தில் இருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

   

 

 

நேற்றைய தினம் (15) 55 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்