இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக Julie Chung பரிந்துரை

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக Julie Chung பரிந்துரை

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக Julie Chung பரிந்துரை

எழுத்தாளர் Staff Writer

16 Jun, 2021 | 1:32 pm

Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி சங்கின் (Julie Chung) பெயரை பரிந்துரைத்துள்ளார்.

வௌ்ளை மாளிகை நேற்று இது குறித்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

வௌிவிவகார சேவை பிரிவின் சிரேஷ்ட உறுப்பினரும் அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்தின் பதில் உதவி செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

Julie Chung ஜப்பான் விவகார திணைக்களத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன் அமெரிக்காவின் ஈராக்கிற்கான தூதரகத்திலும் சிரேஷ்ட ஊழியராக பணியாற்றியுள்ளார்.

இதனை தவிர, கொலம்பியா, வியட்னாம், ஜப்பான் தூதரங்களிலும் Julie Chung  கடமையாற்றியுள்ளார்.

Julie Chung கலிபோர்னியா- சென்டியாகோ மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்களில் தனது பட்டப்படிப்புகளை நிறைவு செய்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்