ஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்

ICC-இன் ஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம் பிடித்தது

by Bella Dalima 15-06-2021 | 6:59 PM
Colombo (News st) ICC வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை சமநிலையில் முடித்த நியூசிலாந்து அணி, பர்மிங்காமில் நடந்த 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதன்மூலம் நியூசிலாந்து அணி (123 புள்ளி) சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அணி (121 புள்ளி) முதலிடத்தில் இருந்து 2 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா 108 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், இங்கிலாந்து 107 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 94 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. மேற்கிந்தியத் தீவுகள் (84 புள்ளி), தென் ஆப்பிரிக்கா (80 புள்ளி), இலங்கை (78 புள்ளி), பங்களாதேஷ் (46 புள்ளி), ஜிம்பாப்வே (35 புள்ளி) முறையே 6 முதல் 10 இடங்களை வகிக்கின்றன.