சுகாதார அமைச்சின் கீழ் 9 மாவட்ட வைத்தியசாலைகள்

9 மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவர அனுமதி 

by Staff Writer 15-06-2021 | 11:08 AM
Colombo (News 1st) மாகாண சபைகள் ஊடாக நிர்வகிக்கப்படும் தெரிவுசெய்யப்பட்ட 9 மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதனடிப்படையில், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிபிட்டிய, அவிசாவளை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்ட பொது வைத்தியசாலைகளே சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன.