வெலிகம போதைப்பொருள் கடத்தலின் பின்புலத்தில் ஹரக் கட்டா

வெலிகம போதைப்பொருள் கடத்தலின் பின்புலத்தில் ஹரக் கட்டா

வெலிகம போதைப்பொருள் கடத்தலின் பின்புலத்தில் ஹரக் கட்டா

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2021 | 8:08 am

Colombo (News 1st) வெலிகம கடற்பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலானது துபாயிலிருந்து வழிநடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பிரபல போதைப்பொருள் கடத்தற்காரரான ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தன என்பவரால் இந்த போதைப்பொருள் கடத்தல் வழிநடத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த போதைப்பொருள் கடத்தல் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டுவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பில் தற்போது தகவல்கள் கிடைத்து வருவதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெலிகம கடற்பிராந்தியத்தில் சுமார் 219 கிலோகிராம் ஹெரோயினுடன் பாதுகாப்பு பிரிவினரால் 12 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 1,758 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்