இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இரண்டு மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

by Staff Writer 14-06-2021 | 7:35 AM
Colombo (News 1st) நிலவும் மழையுடனான வானிலையால் இரண்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட, கிரியெல்ல மற்றும் அயகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, வரக்காபொல, தெஹியோவிட்ட மற்றும் புளத்கொஹூபிட்டிய, அரநாயக்க, கேகாலை, யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல, மாவனெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இன்று (14) மாலை 04 மணி வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்குமென தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். இதேவேளை, மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் சில கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனால் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு மீனவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.