தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1198 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1198 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1198 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

14 Jun, 2021 | 12:15 pm

Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1,198 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை 32,593 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி செயற்பட்ட 160 பேர் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோரை கைது செய்யும் நோக்கில் Drone கெமராக்களை தொடர்ந்தும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரிதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்