காலி வீதியூடான கொழும்பு நோக்கிய வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுகிறது

காலி வீதியூடான கொழும்பு நோக்கிய வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுகிறது

காலி வீதியூடான கொழும்பு நோக்கிய வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுகிறது

எழுத்தாளர் Staff Writer

14 Jun, 2021 | 9:01 am

Colombo (News 1st) காலி வீதியின் வௌ்ளவத்தையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ஒழுங்கையில் இன்று (14) காலை முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கழிவுநீர் அகற்றல் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள சீரமைப்புப் பணிகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அதற்கமைய, காலி வீதியூடாக பயணிக்கும் வாகனங்கள் கடற்கரை வீதியூடாக பயணிப்பதற்கான நடவடிக்கைகள்
போக்குவரத்து பொலிஸாரால் முன்னெடுக்கப்படுமென அவர் கூறியுள்ளார்.

கழிவுநீர் அகற்றல் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை, காலி வீதியூடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு போக்குவரத்து மட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ள நிலையில், மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்