பொருளாதார மத்திய நிலையங்களை திறக்க ​அனுமதி

பொருளாதார மத்திய நிலையங்களை வாரத்திற்கு இரண்டு நாட்கள் திறக்க ​அனுமதி

by Staff Writer 13-06-2021 | 3:43 PM
Colombo (News 1st) பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் பொருளாதார மத்திய நிலையங்களை வாரத்திற்கு இரண்டு நாட்கள் திறப்பதற்கு ​அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பொருளாதார மத்திய நிலையங்களின் நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம் என COVID-19 தொற்றுப் பரவலை தடுக்கும் தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்றும் திறக்கப்பட்டுள்ளன. மொத்த வர்த்தக செயற்பாடுகளுக்கு மாத்திரமே பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படுவதாக விவசாய இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, நுவரெலியா, தம்புளை, கெப்பட்டிபொல, தம்புத்தேகம, நாரஹென்பிட்டி, மீகொட, பிலியந்தலை, இரத்மலானை, வேயங்கொட, வெலிசறை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சுகாதார ஒழுங்கு விதிமுறைகளுக்கு அமைய அவற்றை திறக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. மொத்த விற்பனையாளர்களுக்கான பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டாலும், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் மற்றும் நடமாடும் விற்பனையில் ஈடுபடுவோர் தங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை காண்பித்து பொருளாதார மத்திய நிலையங்களில் கொள்வனவில் ஈடுபட முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.