சொகுசு வாகன இறக்குமதிக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சொகுசு வாகன இறக்குமதிக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு

by Staff Writer 13-06-2021 | 10:13 PM
Colombo (News 1st) எண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெறும் அதேவேளை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய முன்வைத்த யோசனை தொடர்பாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. வாகனங்களை கொள்வனவு செய்ய வேண்டுமென இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கருத்து தெரிவித்தார். இதனிடையே, மக்களின் வரிப்பணத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்கும் பிரேரணையை தாம் நிராகரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் தீர்மானத்தை உடனடியாகக் கைவிட்டு, அந்தப் பணத்தை கொரோனா ஒழிப்பு உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்தல் போன்ற மக்கள் விரோத செயற்பாடுகளைப் பார்த்து, பொறுப்புமிக்க எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி மௌனமாக இருக்காது என அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.