கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தனித்து செயற்படுமா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்து செயற்படுமா?

by Bella Dalima 13-06-2021 | 10:36 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்து செயற்படுமா என பங்காளிக் கட்சிகளிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. சிற்சில பிரச்சினைகள் கட்சிகளுக்குள் இருக்கின்ற போதும், அவற்றை நிவர்த்தி செய்யவே முயற்சிப்பதாகவும் கட்சியிலிருந்து வெளியேறி செயற்படும் எண்ணம் இதுவரை இல்லை எனவும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரப்பங்கீடு தொடர்பில் பல வருடங்களாக கட்சிகளுக்குள் இழுபறி நிலை இருக்கின்ற படியால், தமது கட்சியினருக்கான நேரப்பங்கீடு தொடர்பில் கேட்டுப் பெற வேண்டிய நிலை இருப்பதாகவும் இதுவரை அது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படவில்லை எனவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழீழ மக்கள் விடுதலை இயக்கமும் தனித்து இயங்குவதாக தீர்மானித்துள்ளனவா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனிடம் வினவிய போது, தனித்து இயங்குவது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என பதிலளித்தார்.

ஏனைய செய்திகள்