எரிபொருள் விலையேற்றம்: ஜனாதிபதி தரப்பில் விளக்கம்

உள்நாட்டு பொருளாதாரத்தை பலப்படுத்தவே எரிபொருள் விலையேற்றம்: ஜனாதிபதி தரப்பில் விளக்கம்

by Staff Writer 13-06-2021 | 9:57 PM
Colombo (News 1st)  எரிபொருள் விலையேற்றத்திற்கான பிரதான காரணிகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு கூட்டத்தின்போது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தும் பொது வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. நாட்டின் வங்கி கட்டமைப்பை பலப்படுத்தி, குறைந்த வட்டி விகிதத்தை முன்னெடுப்பதற்கும், நாணய மாற்று விகிதங்களை பலப்படுத்தவும், சுகாதாரம் மற்றும் நலன்புரி விடயங்களை பாதுகாப்பதற்கும், இறக்குமதியில் தங்கியிருக்கும் பொருளாதாரத்தை தேசிய உற்பத்தியில் தங்கியிருக்கும் முதலீடாக மாற்றவும், அதனை நுகர்வோர் பொருளாதாரமாக மாற்றவும் எடுத்த முயற்சியே எரிபொருள் விலையேற்றத்திற்கான பிரதான காரணி என ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.