தெல் பாலாவின் மகள் கைது

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய  தெல் பாலாவின் மகள் கைது

by Staff Writer 13-06-2021 | 3:58 PM
Colombo (News 1st) இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ள “தெல் பாலா” என அழைக்கப்படும் கருப்பையா பாலனின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார். தெல் பாலா பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய நபர் ஆவார். கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அவரின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதான அப்பெண்ணிடம் இருந்து சுமார் 50 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக அவரை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய செய்திகள்