குமார் சங்கக்கார உள்ளிட்ட 10 கிரிக்கெட் வீரர்களுக்கு Hall of Fame கௌரவம்

குமார் சங்கக்கார உள்ளிட்ட 10 கிரிக்கெட் வீரர்களுக்கு Hall of Fame கௌரவம்

குமார் சங்கக்கார உள்ளிட்ட 10 கிரிக்கெட் வீரர்களுக்கு Hall of Fame கௌரவம்

எழுத்தாளர் Bella Dalima

13 Jun, 2021 | 9:43 pm

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார உள்ளிட்ட 10 கிரிக்கெட் வீரர்கள் ICC-யின் Hall of Fame கௌரவத்திற்கு உரியவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தெரிவாகியுள்ள 10 பேரும் கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்கள் என ICC தெரிவித்துள்ளது.

இந்த 10 பேர் அடங்கலாக இதுவரை 103 பேர்  Hall of Fame கௌரவத்தைப் பெற்றுள்ளனர்.

1996 முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில்  கிரிக்கெட் விளையாட்டிற்கு பெரும் பங்களிப்பு நல்கிய  வீரர்கள் தற்போதைய Hall of Fame பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

Hall of Fame கௌரவத்தைப் பெறும் இரண்டாவது இலங்கை வீரர் குமார் சங்கக்கார என்பது குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஏற்கனவே இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

 

இம்முறை தெரிவாகியுள்ளோர்…

1. Aubrey Faulkner – South Africa

2. Monty Noble – Australia

3. Sir Learie Constantine – West Indies

4. Stan McCabe – Australia

5. Ted Dexter – England

6. Vinoo Mankad – India 

7. Desmond Haynes  West Indies

8. Bob Willis – England 

9. Andy Flower – Zimbabwe 

10. Kumar Sangakkara – Sri Lanka 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்