எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மீளப்பெற வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்

எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மீளப்பெற வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்

எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மீளப்பெற வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

13 Jun, 2021 | 4:10 pm

Colombo (News 1st)  எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

எரிபொருட்களின் விலையை அதிகரிக்கும் மிக மோசமான தீர்மானத்தை யார் எடுத்தது என்பது தெரியாத அளவிற்கு அரசாங்கம் நகைப்பிற்குரியதாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை சுமத்திக்கொள்வதனால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்குள் நிலவும் பிரச்சினைகளை அவர்கள் உள்ளக ரீதியில் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, அதன் மூலம் மக்கள் பாதிக்கப்படுவதை பார்த்துக்கொண்டிருக்கத் தயாரில்லை எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பிற்கு மத்தியில் மக்கள் அதிக துயரங்களை எதிர்கொள்ளும் இந்த சந்தர்ப்பத்தில், அரசாங்கம் அதிகார மோகத்தில் பொறுப்பின்றி எடுத்துள்ள இந்த தீர்மானத்தை இரண்டு தடவை சிந்திக்காமல், உடனடியாக எரிபொருளின் விலையை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்