இலங்கைக்கு எதிரான T20: இங்கிலாந்து அணியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கிறிஸ் வோக்ஸ் இணைப்பு

இலங்கைக்கு எதிரான T20: இங்கிலாந்து அணியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கிறிஸ் வோக்ஸ் இணைப்பு

இலங்கைக்கு எதிரான T20: இங்கிலாந்து அணியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கிறிஸ் வோக்ஸ் இணைப்பு

எழுத்தாளர் Bella Dalima

13 Jun, 2021 | 5:41 pm

Colombo (News 1st)  இலங்கைக்கு எதிரான T20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட T20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூன் 23 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

T20 தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி சனிக்கிழமை (12) அறிவிக்கப்பட்டது.

கடைசியாக 2015 இல் இங்கிலாந்து அணிக்காக T20-இல் விளையாடிய கிறிஸ் வோக்ஸ் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்து அணிக்குத் திரும்பியுள்ளார்.

கடைசியாக 2019-இல் இங்கிலாந்து அணிக்காக T20 ஆட்டத்தில் விளையாடிய டேவிட் வில்லியும் இலங்கை தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர்களைத் தவிர்த்து கடைசியாக 2018-இல் விளையாடிய லியாம் டாசனும் தற்போது அணிக்குத் திரும்பியுள்ளார்.

காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ரீஸ் டாப்லே ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

இங்கிலாந்து அணி விபரம்:

இயான் மார்கன் (கெப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், டாம் கரன், லியாம் டாஸன், கிறிஸ் ஜோர்டன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜேசன் ராய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்