அமெரிக்காவில் கோடிக்கணக்கான கொரோனா தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்

அமெரிக்காவில் கோடிக்கணக்கான கொரோனா தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்

அமெரிக்காவில் கோடிக்கணக்கான கொரோனா தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்

எழுத்தாளர் Bella Dalima

13 Jun, 2021 | 5:10 pm

Colombo (News 1st) அமெரிக்காவில் உபரி கொரோனா தடுப்பூசிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கோடிக்கணக்கான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவானவர்களுக்கே இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இருந்தாலும், டென்னஸீ, வடக்கு கரோலினா போன்ற மாகாணங்களில் தடுப்பூசிகளுக்கான தேவை வெகுவாகக் குறைந்து, தினமும் இலட்சக்கணக்கான தடுப்பூசிகள் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

ஒக்லஹோமா மாகாணத்திற்கு வாரந்தோறும் 2 இலட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டும், அந்த மாகாணம் ஒரு மாதத்திற்கும் மேலாக புதிதாக கொரோனா தடுப்பூசிகளை வாங்கவே இல்லை.

இதனால், அமெரிக்க அரசிடம் உபரி கொரோனா தடுப்பூசிகள் தினமும் வெகுவாக அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, கோடிக்கணக்கான தடுப்பூசிகள் விரைவில் காலாவதியாகும் அபாயம் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்