மீனவர்களுக்கான வேறு திட்டம் உள்ளது

மண்ணெண்ணெய் விலையேற்றத்தால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு வேறு திட்டத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

by Staff Writer 12-06-2021 | 10:52 PM
Colombo (News 1st) நீர்கொழும்பு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கேட்டறிந்தார். மண்ணெய் விலையேற்றத்தினால் பாதிக்கப்படுகின்ற கடற்றொழிலாளர்களுக்கு ஈடு செய்யக்கூடிய வகையில் வேறு திட்டத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாக இதன்போது அமைச்சர் கூறினார். அவர் கூறியதாவது,
மண்ணெண்ணெய் விலை கூடியமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு லிட்டருக்கு 35 ரூபா அதிகரிக்க ​ வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் எங்களுடைய கடற்றொழில் அமைச்சு இணங்கவில்லை. 7 ரூபா அளவில் தான் அந்த விலையேற்றத்திற்கு இணங்கியிருந்தது. அதே ​நேரம் 7 ரூபாவினால் பாதிக்கப்படுகின்ற கட்றறொழிலாளர்களுக்கு ஈடு செய்யக்கூடிய வகையில் நாங்கள் வேறு திட்டங்கள் வைத்துள்ளோம். வெகு விரைவில் அதனை அறிவிப்போம்.