தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 1027 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 1027 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 1027 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

12 Jun, 2021 | 2:01 pm

Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 1027 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 30,042 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தலங்கம பகுதியில் ட்ரோன் கெமராக்கள் மூலம் நேற்று (11) நடத்தப்பட்ட கண்காணிப்பின் போது, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேல் மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் 14 பகுதிகளில் நேற்று மாத்திரம் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, மாகாண எல்லைகளை மீறி பயணித்த 91 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் இன்றும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்