எரிபொருள் விலையேற்றம் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது திணிக்கப்பட்ட பாரிய சுமை: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்

எழுத்தாளர் Staff Writer

12 Jun, 2021 | 10:20 pm

Colombo (News 1st) நாளாந்தம் நாட்டு மக்களுக்கு சுமையை ஏற்படுத்துகின்ற அரசாங்கம், நேற்றிரவு புதியதொரு சுமையை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உப குழு உரிய தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டி தற்போதைய சூழ்நிலையில் எரிபொருளின் விலையை அதிகரித்து மக்களை நிர்க்கதியாக்கியமை கண்டிக்கத்தக்கதும் நாகரீகமற்றதுமென அவர் கூறியுள்ளார்.

சீனி மோசடி, தேங்காய் எண்ணெய் மோசடிகளுக்கு தமது நண்பர்களுக்கு வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுத்த அரசாங்கம், கடல் வளத்தையும் அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு எதிரான தீர்மானங்களை அரசாங்கம் எடுப்பதாகவும் மக்கள் சார்ந்த தீர்மானங்களை காண முடிவதில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்