அரிசி, சீனி, பால்மா தொடர்பான கையிருப்பு தகவல்களை 7 நாட்களுக்குள் பதிவு செய்யுமாறு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

எழுத்தாளர் Bella Dalima

12 Jun, 2021 | 1:28 pm

Colombo (News 1st) அரிசி, சீனி, சோளம், பால்மா தொடர்பான கையிருப்பு தகவல்களை 07 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அரிசி உற்பத்தியாளர்கள், ஆலை உரிமையாளர்கள், நெல் அல்லது அரிசியை களஞ்சியப்படுத்தியிருப்போர், அவற்றை விநியோகிப்போர், மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் உள்ளிட்டோர் தங்களிடமுள்ள கையிருப்புகளை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார சட்டத்திற்கு அமைய, அதிகார சபையின் தலைவரால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்