65,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

65,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

by Staff Writer 11-06-2021 | 10:14 AM
Colombo (News 1st) 65,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இன்று (11) காலை நாட்டை வந்தடைந்தன. கொத்தட்டுவ பகுதியிலுள்ள மக்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை வழங்குவதற்காக இவற்றில் 15,000 தடுப்பூசிகளை ஒதுக்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். ஏனைய 50,000 தடுப்பூசிகளை வழமை போன்று வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.