26 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கம்

26 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கம்

26 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

11 Jun, 2021 | 8:37 am

Colombo (News 1st) ஏழு மாவட்டங்களின் 26 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய, திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிஞ்சாக்கேணி மற்றும் முனைச்சேனை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் கூம்ஸ் ​தோட்டம் விடுவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்விஸ் தோட்டம், தேசிய வீடமைப்பு திட்டம், அத்கம் வீடமைப்பு திட்டம், அல்விஸ் தோட்ட கிராமம், கொக்டேன் மாவத்தை, பரணவத்த உள்ளிட்ட பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதனைத்தவிர மொனராகலை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில கிராம சேவகர் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்