கடல்வாழ் இனங்களின் இனப்பெருக்கத்திற்கான திட்டம்

கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக கைவிடப்பட்ட பஸ்களை கடலில் இறக்கும் திட்டம் காங்கேசன்துறையில் முன்னெடுப்பு

by Staff Writer 11-06-2021 | 11:32 PM
Colombo (News 1st) செயற்கையான முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் நோக்கில், கைவிடப்பட்ட பஸ்களை கடலில் இறக்கும் திட்டத்தின் மற்றுமொரு கட்டம் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இன்று முன்னெடுக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் பிரகாரம், வடக்கு கடலில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் நோக்கிலேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கடற்படையின் ஒத்துழைப்புடன் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் குறித்த செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கைவிடப்பட்ட 30 பஸ்களை கடலில் இறக்கும் நோக்கில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. சயுரு கப்பலின் மூலம் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து பஸ்கள் ஏற்றிச்செல்லப்பட்டு கடலில் இறக்கப்பட்டன. கைவிடப்பட்ட பஸ்கள் மற்றும் ரயில் பெட்டிகளை கடலில் இறக்கி விடுவதன் மூலம் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் நீரடிப் பாறைகளுக்கு நிகரான சூழலை செயற்கையான முறையில் உருவாக்கும் நோக்கிலேயே கடற்றொழில் அமைச்சினால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.        

ஏனைய செய்திகள்