எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

by Staff Writer 11-06-2021 | 11:57 PM
Colombo (News 1st) இன்று (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் CEYPETCO எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்தது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 20 ரூபாவாலும் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 23 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் டீசல் 7 ரூபாவாலும், சுப்பர் டீசல் 12 ரூபாவாலும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 7 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.